52. சினிமாக்களில் சிக்கனம் | THRIFT IN CINEMAS
Update: 2020-08-16
Description
சினிமாக்களிலும் சிக்கனமுண்டு,
சினிமாத்துறையில் சிக்கனமும்
சிங்கநடை போடுவதுண்டு.
சிங்கத்தைக்காட்ட காட்டுக்குபோகத்
தேவையில்லை, கம்ப்யூட்டரேபோதும்!
தங்கநகைகள் வாங்கத்தேவையில்லை,
கில்டுநகைகளே போதும்!
காஸ்ட்லி ஆடைகள்தேவையில்லை.
கலர்கலராய் ஜிகினாப்
பேப்பர்களே போதும்!
சிக்கனத்தின் சிம்மகர்ஜனை
ஆடைகளிலும் ஆரவாரிக்கிறது.
கோட்டும்சூட்டும் பட்டாடைகளும்
பகட்டுத்துணிகளும் தேவையில்லை,
கிழிந்தடவுசரும் மிஞ்சியஎஞ்சிய
துண்டுத்துணிகளே போதும்!
ஆடியன்ஸ்கூட்ட ஆள்தேடதேவையில்லை,
ஆன்லைன் டெலிகாஸ்டேபோதும்!
வசனங்கள் அதிகம்தேவையில்லை,
வார்த்தைகளே போதுமானது!
வசீகரமான காட்சியமைப்பிற்கு
வார்த்தைச்சிக்கனம் வைக்கப்படுகிறது!
சிரிப்புபஞ்சத்தை பாதுகாக்க
பஞ்ச் டயலாக்களுண்டு!
அயல்நாட்டு ஷூட்டிங்குப்பதில்
அண்ணாநகரிலேயே செட்டிங்!
நாட்டிற்கு தலைவனாகதலைவியாக
தலைகெட்டு செலவுசெய்யத் தேவையில்லை!
Comments
In Channel























